கோத்தபாய வெற்றி பெற்றது எப்படி? இலங்கை செய்தியாளர் சொன்ன தகவல்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் கோத்தபாய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அவர் வெற்றி பெற்றது எப்படி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கை தமிழர்களை பற்றி பேசுவது இலங்கையில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இலங்கை பத்திரிக்கையாளர் சோமதீரன் கூறியுள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

இவருக்கு தமிழர்களின் வாக்கு குறைவாக இருந்ததால், தமிழர்களை இவர் எப்படி நடத்தப் போகிறார்? என்ற அச்சம் எழுந்த நிலையில், அவர் நான் ஒரு ஜனாதிபதியாக இருப்பேன், எந்த ஒரு பாகுபாடும் பார்க்கமாட்டேன் என்று கூறினார்.

இந்நிலையில் இலங்கை பத்திரிக்கையாளர் சோமதீரன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி எதிர்பார்த்த ஒன்றா?

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் ஏராளமானோர் இறந்தனர். அதில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான், இந்த தாக்குதலுக்கு பின் கோத்தபாய ராஜபக்ச வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல், அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் நடந்தது, அந்த உள்ளாட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணி கணிசமான வாக்குகளை பெற்றிருந்ததால், இலங்கையில் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையவில்லை என்பதை இது நன்றாக காட்டியது.

தமிழர்கள் இவர் ஜனாதிபதியாவதை விரும்பவில்லையா?

தேர்தல் வெற்றிக்கு பின் கோத்தபாய ராஜபக்சவே பெளத்த சிங்களர்களின் வாக்கில் தான் வெற்றி பெற்றேன் என்று கூறினார். தமிழர்களின் வாக்குகளோ, இஸ்லாமியார்களின் வாக்குகளோ கிடைக்கவில்லை.

குறிப்பாக சிங்கள கத்தோலிக் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கூட, அவர் அந்தளவிற்கு வாக்குகளை பெறவில்லை, எப்போதும் இலங்கையில் நடைபெறும் இது போன்ற தேர்தலில் சிறுபான்மையினர் வெற்றியை தீர்மானிப்பது போன்று இருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் சிங்கள பெளத்த தேசியவாதிகள் அதில் தெளிவாக இருந்தனர். இதன் காரணமாகவே சிங்களர்கள் அது குறித்து பிரசாரத்தை மேற்கொண்டனர். சிங்களரையே ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும், தமிழர்களிடம் எதிர்பார்க்க கூடாது என்றெல்லாம் கூறினர்.

இலங்கையில் இன வாதம், மதவாதம் அதிகரித்து கொண்டே செல்கிறது, இதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் பேசும் பேச்சு தான் காரணம் என்று கூறப்படுதே குறிப்பாக சீமான்?

ஈழத்தமிழர்கள் அழித்து கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் ஒரு பெரிய எழுச்சி வந்தது. அந்த எழுச்சி என்னவானது என்றால் கடந்த 10 வருடங்களில் நடந்ததை நாம் பார்த்தால் தெரியும்.

இலங்கையில் சிங்களவர் ஒரு பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும் கூட, சிங்களவர்கள் முடிவற்ற தன்மையில் இருக்கின்றனர்.ஏனெனில் அவர்கள் உலகை பொறுத்தவரை இலங்கையில் இருக்க கூட ஒரு சிறுபான்மையினர், இலங்கையில் இருக்கும் ஒன்றரை கோடி பேர் தான் சிங்களவர்கள். வேறெங்கும் அதிகமாக இல்லை.

ஆனால் அதே சமயம் இலங்கைக்கு பக்கத்தில்(தமிழ்நாடு ) சுமார் 7 கோடி முதல் 8 கோடி தமிழர்கள் இருப்பது அச்சத்தை கொடுக்கிறது. அந்த அச்சம் தான் அவர்களுக்கு இனவாத பிரசாரத்தை சிங்களவர்களிடம் அதிகமாக எடுத்து செல்கிறது.

சீமானை பற்றி கேட்டதால் சொல்கிறேன், சீமானின் பேச்சுக்கள் தமிழ்நாட்டில் தலைப்பு செய்தியாக வருகிறதோ இல்லையோ? ஆனால் இலங்கையில் இருக்கும் சிங்கள பத்திரிக்கைகளில் சீமானின் பேச்சு தலைப்பு செய்தியாக, முதல் பக்கத்தில் வருகிறது.

ஏனெனில் அந்த பேச்சு சிங்களவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் இருக்கிறது. கோத்தபய ராஜபசவை தேர்வு செய்ய வைப்பதில் சிங்கள ஊடங்கங்களின் பங்கு அதிகளவு இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் துடித்து கொண்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் படையெடுத்து இலங்கையை பிடித்துவிடுவோம், என்று சொல்வது, இந்திய இராணுவத்தை அனுப்பி இலங்கையை பிடித்துவிடுவோம் என்று சொல்வது போன்றவைகளை சாதரண அப்பாவி சிங்கள மக்களிடம் இதை கொண்டு செல்கின்றனர்,

அது அவர்களுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும் போது, அவர்கள் கோத்தபாய ராஜபக்சவை தெரிவு செய்கின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results