போதை மருந்தால் உயிரிழந்த விலைமாது பெண்: வாடிக்கையாளருக்கு சிறை தண்டனை?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டுப்பாடின்றி போதை மருந்து சாப்பிட்டு உயிரிழந்த விலைமாது பெண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாடிக்கையாளர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சூரிச் நகரில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு போதை மருந்து சாப்பிடும் மருத்துவர் ஒருவர் நண்பராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு எக்ஸ்டஸி என்னும் போதை மருந்தை மருத்துவரான தனது நண்பரிடமிருந்து அவர் பெற்றுள்ளார்.

பின்னர், உல்லாசமாக இருப்பதற்காக 27 வயதான விலைமாது பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அப்பெண் நபருக்கு தெரியாமல் அவர் வைத்திருந்த போதை மருந்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட விலைமாது திடீரென மயக்கமாகி விழுந்துள்ளார்.

இக்காட்சியை கண்ட நபர் உடனடியாக தனது மருத்துவ நண்பருக்கு தகவல் அளித்துவிட்டு பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து வாடிக்கையாளருக்கு 300 பிராங்க் அபராதத்துடன் 12 மாதங்கள் நிபந்தனை சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

போதை மருந்தை கொடுத்த மருத்துவ நண்பருக்கு 15,000 பிராங்க் அபாரதம் விதிக்கப்பட்டது. ஆனால், இக்குற்றத்தில் தொடர்பில்லாத தங்களுக்கு தண்டனை வழங்கியதை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, விலைமாது பெண்ணின் மரணத்திற்கு இருவரும் நேரடியாக காரணம் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments