லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் 20வது கலைவாணி விழா

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

லுட்சேர்ன் மாநகரில் லுட்சேர்ன் தமிழர் இந்து கலாச்சார ஒன்றியத்தின் ஆதரவில் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் 20 வது ஆண்டு கலைவாணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான விழா, ஆலய குரு நகுலேஸ்வரகுருக்களின் பக்தி சிரத்தையுடனும், ஜோதீஸ்வரகுருக்களின் துணையுடனுமான பூஜையை தொடர்ந்து பொது சுடரேற்றல், அமைதி வணக்கம் செலுத்தி, கலைவாணிக்கான கலைநிகழ்ச்சிகள் எம்மின எதிர்கால சந்ததியினாரால் கலை மேடை களைகான ஆரம்பித்தது சுவிஸ் வாழ் கலை வளர்க்கும் ஆசிரியர்களினதும், கலைஞர்களினதும் நேர்த்தியான நெறியாட்கையுடன் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புக்ளான, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு இசைக் கச்சேரி, இசைச்சங்கமம், வில்லுப்பாட்டு, பக்திகான நிகழ்வுகளை இளம் அறிவிப்பாளர் கஜன் இனிய தழிழுடன் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து ஆலய பரிபாலனசபையின் தலைமையுரையில் திரு. இராமநாதன் இராசலிங்கம் அவர்கள் துர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்பாடுகள் பற்றியும், எம் எதிர்கால சந்ததியினிரது கலை கலாச்சார வளர்ச்சிக்கான, மற்றும் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஆலயத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் மாற்றம் ஏதும் இல்லாது தொடர்ந்து பயணிக்கும் என்றும்.

இப்பயணத்தில் ஏற்படும் தடைகளைத்தாண்ட, மொழி, சமயம், கலை, கலாச்சாரம் வளர்க்க லுட்சேர்ன் வாழ் தமிழ் மக்களின் பங்களிப்பை வேண்டி நின்றார்.

தொடர்ந்த சிறப்புரையில்தவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தழிழர் என்ற அடையாளங்களுடனும், தமிழ் நம் தாய் மொழி , தாய்மொழியை நாம் அனைவரும் நேசித்து வாழவேண்டும் என்றும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் மாவீர்களினதும் , தியாகிகளினதும் வரலாறுகளை எமது சந்ததியினரிடம் சரியானமுறையில் கொண்டு போய் சேர்ப்பது நமது கடமை என்பதையும், எம் தியாகிகளிகள் பூசிக்கபட வேண்டியவர்கள் என்று தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நன்றியுடன் 2017 வது ஆண்டு கலைவாணி விழா இனிதே நிறைவடைந்தது .

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்