ஒரு கிளாஸ் மதுவை £7,600 பணம் கொடுத்து வாங்கிய கோடீஸ்வரர்: நடந்த மோசடி

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

1878ல் தயாரிக்கப்பட்டதாக கூறி விஸ்கி மதுவை சுவிஸ் ஹொட்டல் ஒன்று கோடீஸ்வரருக்கு £7,600-க்கு விற்ற நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Moritz கிராமத்தில் புகழ்பெற்ற The Waldhaus Am See ஹொட்டல் அமைந்துள்ளது.

சீனாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபரான Zhang என்பவர் சுற்றுலாவுக்காக சுவிஸ்க்கு வந்த போது குறித்த ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்போது 1878-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Macallan என்ற விஸ்கி ரக மதுபானம் தங்களிடம் உள்ளதாகவும், அதில் பல சிறப்புகள் உள்ளதாகவும் ஹொட்டல் உரிமையாளர் Zhang-யுடம் கூறியுள்ளார்.

ஒரு கிளாஸ் மதுபானத்தின் விலை £7,600 என்று கூற கோடீஸ்வரரான Zhang அதை வாங்கி சென்றுள்ளார்.

இந்த செய்தி உலகெங்கிலும் வைரலாக பரவியதையடுத்து, அது குறித்து ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டது.

அதில், குறித்த விஸ்கி மதுவானது 18ஆம் நூற்றாண்டில் தயாரிக்கவில்லை எனவும், 1970லிருந்து 1972 ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் மால்ட் எனப்படும் ஒரே வகையான தானிய பொருள் மதுவில் கலந்துள்ளதாக கூறியதும் பொய் என தெரியவந்துள்ளது.

அது போலியான மதுபாட்டில் என தங்களுக்கு தெரியாது எனவும், குறித்த பாட்டிலை 25 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தை வாங்கினார் எனவும் Waldhaus ஹொட்டலின் தற்போதைய மேலாளர் Sandro கூறியுள்ளார்.

அதன் பின்னர் பாட்டிலை திறக்கவேயில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்