இரண்டு சுவிஸ் பத்திரிக்கையாளர்கள் அபுதாபியில் கைது: நடந்தது என்ன?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
128Shares
128Shares
lankasrimarket.com

அருங்காட்சியகம் தொடக்க விழாவை பதிவு செய்ய அபுதாபிக்கு சென்ற இரண்டு சுவிஸ் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்களை அதிகாரிகள் கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான RTS-ல் பணிபுரியும் Serge Enderlin மற்றும் Jon Bjorgvinsson ஆகிய இருவரும் அபுதாபியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லவுரி அபுதாபி அருங்காட்சியகத்துக்கு சென்றனர்.

தங்கள் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் Mise au Point நிகழ்ச்சிக்கு தொடர்புடைய விடயங்களை வீடியோவாக பதிவு செய்ய இருவரும் போனார்கள்.

அப்போது திடீரென Serge மற்றும் Jon-ஐ அதிகாரிகள் கைது செய்து, 50 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் நேற்று இருவரும் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஆனாலும், அவர்களின் கமெரா, கணினி போன்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

இரண்டு பத்திரிக்கையாளர்களும் என்.ஜி.ஓ-களுக்கு அல்லது சுவிஸ் தவிர வேறு நாட்டுக்காக வேலை செய்கிறார்களா என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Serge மற்றும் Jon கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள RTS நிறுவனம், இது அச்சுறுத்தலுக்கான முயற்சி மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்