சுவிட்சர்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நபர்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கட்டுமான பணியில் இருந்த நபர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தில் குழு ஒன்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது குழி ஒன்றை ஆழமாக தோண்டும் பணியில் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார்.

திடீரென்று மண்சரிவு ஏற்பட்டதில் அந்த நபர் உயிருடன் புதையுண்டுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த எஞ்சிய குழுவினர் அவரை அந்த குழியில் இருந்து மீட்க கடுமையாக போராடியுள்ளனர்.

ஆனால் அவர்களின் முயற்சி பலன் தரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அவர்கள் உடனடியாக மண்டல பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி மண்டல மீட்பு குழுவினரின் உதவியையும் நாடியுள்ளனர். இதனையடுத்து Wichtrach பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவப்பகுதிக்கு விரைந்தனர்.

இந்த நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அந்த நபரை குழியில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

தற்போது பெர்ன் மண்டல பொலிசார் இந்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...