குழந்தைப்பேறு தொடர்பில் சுவிஸ் நிறுவனம் அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் பார்மசூட்டிக்கல் ஜாம்பவானான நோவார்ட்டிஸ் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 14 வார பிரசவ விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதில் என்ன மகிழ்ச்சி என்கிறீர்களா?

இந்த விடுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும். ஆம் அப்பாக்களுக்கும் இனி பிரசவ விடுமுறை அளிக்க நோவார்ட்டிஸ் முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் அப்பாக்களுக்கு பிரசவ விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசியல் ரீதியாக விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நோவார்ட்டிஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

சட்டத்திற்குட்பட்டு பெற்றோராகும் அனைவருக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், சரிசமமாக 14 வாரங்கள் பிரசவ விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடைமுறை ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் நோவார்ட்டிஸ் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers