உயர் கல்வியில் ஆண்களை முந்தும் சுவிட்சர்லாந்து பெண்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கடந்த 20 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர் கல்வியில் முன்னேற்றம் காட்டியுள்ளனர்.

தற்போது ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி டிப்ளமோக்களை பெறுவதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1999இல் 25 முதல் 34 வயதுடைய, வெறும் 9.8 சதவிகிதம் பெண்கள் மற்றும் 14.4 சதவிகிதம் ஆண்கள் மட்டுமே உயர் கல்வி டிப்ளமோக்களை பெற்றார்கள்.

ஆனால் 2019இலோ அந்த விகிதம் மிகவும் அதிகரித்து பெண்களின் எண்ணிக்கை 42.3 சதவிகிதமாகவும் ஆண்களின் எண்ணிக்கை 34.7 சதவிகிதமாகவும் ஆகியுள்ளது.

மே 13 முதல் 17 வரை சுவிஸ் நகரமாகிய Neuchâtelஇல் ஐரோப்பாவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம் சார்பில் நடத்தப்படும் பாலின புள்ளியியல் குறித்த கருத்தரங்குகள் நடத்தப்படுவதையொட்டி இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல், பொதுவாக ஆண்கள் அதிகம் தேர்வு செய்யும் அறிவியல், கணிதம், புள்ளியியல், பொறியியல் மற்றும் கட்டுமான அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளை அதிக பெண்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லாமல் தற்காலத்தில் பாடத்தேர்வு மற்றும் வேலை ஆகியவை பாலினத்துடன் தொடர்புடையவையாக இல்லை என்கிறது ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers