சுவிஸில் துப்பாக்கி குண்டுக்கு பலியான இரு பெண்கள் உள்ளிட்ட மூவர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூசிச் நகரில் வெள்ளியன்று காலை துப்பாக்கி குண்டுக்கு பலியான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட மூவரில் இருவர் 34 வயது மற்றும் 38 வயது பெண்கள் எனவும், துப்பாக்கியால் சுட்டவர் 60 வயது ஆண் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் அந்த 60 வயது நபரின் முன்னாள் காதலியான 34 வயது பெண்மணியுடன் 38 வயது பெண்மணி ஒருவர் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இருவரும் சூரிச் நகரில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.

கொசோவோ நாட்டவரான அந்த 34 வயது பெண்மணி முன்னர் தனியார் துப்பறியும் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.

இதுவே இவருக்கும் அந்த 60 வயது நபருக்கும் நெருக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் ஒன்றாக சூரிச் பகுதியில் குடியிருப்பு ஒன்றையும் பதிவு செய்து ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், அந்த குடியிருப்பில் 38 வயது தோழி குடியேறியுள்ளார்.

இந்த நிலையிலேயே அந்த 60 வயது நபர், அத்துமீறி நுழைந்து இருவரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளார்.

இதன் ஒருகட்டத்தில் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பொலிஸ் விசாரணை முடிவிலேயே இதன் உண்மை நிலை தெரியவரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers