அடுத்த இரண்டு நாட்கள்... சுவிஸ் இப்படி தான் இருக்கும்: மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் இரண்டு நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு நிலவி வரும் கோடை காலத்தில் முதன் முறையாக வெப்ப நிலை 30 டிகிரி-யாக பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலே அதிகபட்சமாக நேற்று யூன் 2ம் திகதி மதியம் valais மாகாணத்தின் சீயோன் பகுதியில் 30 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். The rhone valley, பாசல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் 30 டிகிரியை தொடடும் என எதிர்பார்ப்பதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அடுத்த வார இறுதியில் குளிர்ச்சியாக இருக்கும், வெப்ப நிலை 20 டிகிரிக்கும் கீழ் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers