சுவிஸில் துப்பாக்கி குண்டுக்கு பலியான இளைஞர்: 10,000 பிராங்குகள் சன்மானம் அறிவித்த பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கியால் கொலை செய்துவிட்டு தப்பிய நபர் தொடர்பில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10,000 பிராங்குகள் சன்மானம் அளிக்கப்படும் என சூரிச் மண்டல பொலிசார் அறிவித்துள்ளனர்.

சூரிச் மண்டலத்தின் Rüti பகுதியில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் துப்புத் துலங்காமல் திணறினர்.

இதனையடுத்து, குற்றவாளி தொடர்பில் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு 10,000 பிராங்குகள் சன்மானம் வழங்கப்படும் என சூரிச் மண்டல பொலிசார் அறிவித்துள்ளனர்.

அந்த நபர் கொல்லப்படுவதற்கு குடும்ப பகை ஒரு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மாசிடோனியர்களான இரு குடும்பத்தாருக்கு இடையேன பகை சுவிட்சர்லாந்திலும் எதிரொலித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரு குடும்பத்திலும் உள்ள பிள்ளைகள் சிலர் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015, டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி காரில் இருந்த இருவர் மீது திடீரென்று துப்பாக்கியால் ஒரு கும்பல் தாக்கியது.

இதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டார். எஞ்சிய ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த தாக்குதலை முன்னெடுத்தவர்கள் திலாவர் குடும்பம் என விசாரணையில் தெரியவந்தது. இதில் திலாவர் பி என்பவர் மாசிடோனியாவில் வைத்து கடந்த ஆண்டு துப்பாக்கியால் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் அங்கிருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளனர்.

மாசிடோனியாவில் நடந்த திலாவர் பி கொலைக்கும் Rüti பகுதியில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நடந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என அவரது உறவினர்கள் தற்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers