ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஜெனீவா விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள புதிய வசதி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் இனி ஜெனீவா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் சோதனையை மிக விரைவாக முடித்துவிடும் வகையில் நவீன வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் நெருக்கடி நேரங்களில் நேரத்தை மிச்சப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

பயோமெட்ரிக் அல்லது மின்னணு ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள், ஜெனீவா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பாஸ்போர்ட் சோதிக்கும் கதவுகள் வழியாக இனி எளிதாக கடந்து செல்லலாம்.

இந்த தானியங்கி அனுமதி வசதி, ஐஸ்லாந்து, Liechtenstein மற்றும் நார்வே நாட்டவர்களுக்கும் செய்யப்பட்டுள்ளது.

பயணி தனது பாஸ்போர்ட்டை குறிப்பிட்ட கருவியின் மீது வைக்கவேண்டும், அத்துடன் அங்கிருக்கும் கமெரா அவரது முகத்தை அடையாளம் கண்டு, அவருக்கு குற்ற பின்னணி உள்ளதா என்பதை கவனிக்கும்.

அப்படி அவர் மீது வழக்கு, குற்றச்சாட்டு ஏதாவது இருந்தால், எல்லை பாதுகாவலர் ஒருவர் அவரை அணுகுவார்.

அப்படி பிரச்சினை எதுவும் இல்லை என்றால், கதவு தானாக திறக்கும். இந்த நடைமுறை, வெறும் 10 அல்லது 12 விநாடிகளுக்குள் முடிந்துவிடும்.

இந்த திட்டத்தில் முக்கிய நோக்கம் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் அதே நேரத்தில் உயர் மட்ட பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்வதுதான் என்கிறார் விமான நிலைய அதிகாரி ஒருவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்