பிரெக்சிட்டைப்போல் எங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் வேண்டும்: நடவடிக்கையில் இறங்கியுள்ள சுவிஸ் கட்சி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரித்தானியாவில் பிரெக்சிட் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுபோல், சுவிட்சர்லாந்திலும் நடத்துவதற்கான முயற்சிகளில் சுவிஸ் கட்சி ஒன்று இறங்கியுள்ளது.

முன்பு பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்திருந்தபோது, இரு பக்கத்து குடிமக்களும் தடையின்றி மறுபக்கத்திற்கு சென்று வரலாம், வாழலாம், வேலை செய்யலாம் என்று இருந்த அதே நிலை, தற்போது சுவிட்சர்லாந்திலும் உள்ளது.

இதில் கவனிக்கவேண்டிய விடயம், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு அல்ல.

தற்போது, சுவிட்சர்லாந்தின் மக்கள் கட்சி (SVP), சுவிட்சர்லாந்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் புலம்பெயர்வதை கட்டுப்படுத்த விரும்புகிறது.

அதைக் குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிய, பிரித்தானியாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதைப்போல, மே மாதம் 17ஆம் திகதி சுவிட்சர்லாந்திலும் ஒரு வாக்கெடுப்பு நடத்த விரும்புகிறது SVP.

ஆனால், அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்து, மக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்களானால், அது சுவிட்சர்லாந்தின் தடையில்லா போக்குவரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என சுவிஸ் பெடரல் கமிஷன் எச்சரித்துள்ளது.

பிரெக்சிட்டைப் பார்த்து சுவிட்சர்லாந்தும் அதேபோல் செய்ய நினைக்கும்பட்சத்தில், பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வரும் என கவுன்சில் எச்சரித்துள்ளது.

முக்கியமாக, பிரித்தானியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் செய்வதுபோல், சுவிட்சர்லாந்துடனும் அது செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

ஆகவே, இரு பக்கத்துக்கும் இடையிலான தடையில்லா போக்குவரத்து முடிவுக்கு கொண்டுவரப்படும்.

அத்துடன், சுவிட்சர்லாந்தின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதால், ஏற்றுமதியில் பாதிக்குமேல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்படுவதால், வர்த்தகமும் கடுமையாக பாதிக்கும் என கமிஷன் எச்சரித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...