சொந்த மகளையே... சுவிஸ் தம்பதியின் கொடூர செயல்: வெளியான பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
768Shares

சுவிட்சர்லாந்தின் St. Gallen நகரில் நான்கு வயதான சொந்த மகளையே பாலியல் அடிமையாக்கிய வழக்கில் மண்டல நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

St. Gallen நகரைச் சேர்ந்த அந்த 55 வயதான நபர் தமது சொந்த குழந்தையை பாலியல் செயல்களுக்கு இலக்காக்கியதாகவும்,

அதற்கு தொடர்புடைய பல ஆபாசக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் குற்றவாளி என மண்டல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால் குறித்த 55 வயது நபருக்கு நிபந்தனையற்ற 4 3/4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 90 நாட்கள் தினசரி 30 பிராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

2014 மற்றும் 2015 காலகட்டத்தில் குறித்த தம்பதி தங்களது நான்கு வயது மகளை பாலியல் அடிமையாக உருவாக்க முயன்றுள்ளனர்.

இதன் ஒருபடியாக குறித்த தாயார் அந்த பிஞ்சு குழந்தையுடன் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி, அந்தப் பிஞ்சு குழந்தைக்கு குறித்த தம்பதி ஆபாச வீடியோ காட்சிகளையும் காண்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், அந்த 55 வயது தந்தையிடம் இருந்து மிருகத்தனமான பாலியல் வன்முறை மற்றும் விலங்குகள் சம்பந்தப்பட்ட பாலியல் செயல்களையும் காணொளி வடிவில் மீட்டுள்ளனர்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின்போது, தமது குற்றத்தை அந்த தாயார் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அந்த தந்தை மறுத்துள்ளதுடன்,

அது அந்த தாயாரால் மட்டுமே ஏற்பட்டது என அவர் பழி கூறியுள்ளார். கடந்த 2018 மார்ச் மாதம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் குறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிரைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஆனால் அவர் இந்த தீர்ப்பை மண்டல நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், மேலும் அவரை இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்