சுவிட்சர்லாந்தில் கண் பார்வை இல்லாத ஒரு நாயை கடத்திச் சென்ற மர்மப்பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சூரிச்சில் Letzipark ஷாப்பிங் சென்டரில் ஒரு பெண் கண் பார்வையில்லாத ஒரு நாயை தூக்கிச் சென்றுவிட்டார்.
ஜாக் என்று அழைக்கப்படும் அந்த 8 வயது நாய், மனிதர்களுடன் நன்கு பழகக்கூடிய Havenese வகையைச் சேர்ந்த நாயாகும்.
நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் அந்த நாயை கடத்திச் சென்றதாக தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அமைதியாக வந்து கட்டிப்போடப்பட்டிருந்த அந்த நாயை, கட்டை அவிழ்த்து எதுவும் நடவாததுபோல் அந்த பெண் நடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நாயைக் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு சூரிச் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.