சுவிட்சர்லாந்தை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: உதவி கேட்டு அழைத்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் மண்டலம் மற்றும் பாஸல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 8.35 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 என பதிவான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

ஆனால், அதன் பின்னர் அந்த நிலநடுக்கமானது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக தகவல் வெளியானது.

கிளாரஸ் மண்டலத்தின் Kärpf பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில், சுமார் 8.42 மணியளவில் Elm பகுதி அருகாமையில் ரிக்டர் அளவில் 2.7 என மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் பாஸல் பகுதியின் Gelterkinden-ல் ரிக்டர் அளவில் 2.7 என மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 4 புள்ளிகளுக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கம் மட்டுமே மக்களால் பொதுவாக உணர முடியும் என்றாலும், குறைந்த அளவிலான நிலநடுக்கமும் சேதத்தை ஏற்படுத்த முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

சுமார் பத்தில் இருந்து 12 நொடிகள் வரை நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கிளாரஸ் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பலபேர் அவசர உதவிக்கு அழைத்து விசாரித்துள்ளதுடன், தகவலும் பதிவு செய்துள்ளனர்.

பொருள் சேதம் அல்லது தனிப்பட்ட காயம் பற்றிய தகவல்கள் ஏதும் தற்போதைக்கு வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், நிலநடுக்கம் பதிவான பகுதியில் லேசான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்