சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்... அரசாங்கம் முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி எச்சரிக்கை

Report Print Basu in சுவிற்சர்லாந்து
2462Shares

சுவிட்சர்லாந்தில் டிசம்பர் 22ம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுவிட்சர்லாந்தில் டிசம்பர் 22ம் தேதி முதல் முதல் ஒரு மாதத்திற்கு உணவகங்களும் மதுக்கடைகளும் மூடப்படும்.

அதே நேரத்தில், பனிச்சறுக்கு பகுதிகள் திறந்த நிலையில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், அத்துடன் நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கலாச்சார நிறுவனங்கள் மூடப்படும்.

சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

R எண் 1-க்கு கீழ் உள்ள பகுதிகள், அதன் கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்கள் மற்றும் விளையாட்டு மையங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் நிலைமையை அரசாங்கம் மீண்டும் மதிப்பிடும், நிலைமை மேம்படவில்லை என்றால் 2021-ன் தொடக்கத்தில் கடுமையான நடவடிக்கைகள் விதிக்கக்கூடும் என சுவிஸ் ஜனாதிபதி Simonetta Sommaruga எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்