ஆப்பிளின் AirPods சாதனங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள அபாரமான தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
29Shares

வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட AirPods சாதனங்களின் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இதன் புதிய அப்டேட்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் விரைவில் மற்றுமொரு AirPods சாதனத்தினை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.

இச் சாதனத்தில் வழமைக்கு மாறாக அசைவுகளின் மூலம் குறித்த சாதனத்தினை கட்டுப்படுத்தும் வசதி தரப்படவுள்ளது.

அதாவது இதனை அணிந்திருப்பவர் தனது உடல் அசைவுகளின் மூலம் குறித்த சாதனம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.

இப் புதிய தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய சாதனத்தினை Detecting Through-Body Inputs At A Wearable Audio Device என அழைக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் தொடுகை உணரும் தொழில்நுட்பம் மற்றும் பொத்தான் தொழில்நுட்பம் என்பன AirPods சாதனங்களில் தரப்பட்டிருந்தது.

எனினும் எதிர்காலத்தில் இத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படாது உடல் அசைவை உணரும் தொழில்நுட்பம் மாத்திரமே இச் சாதனங்களில் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்