செரீனா வில்லியம்ஸின் ஆட்டத்தை நேரில் ரசித்த மகள்

Report Print Kabilan in ரெனிஸ்
124Shares
124Shares
ibctamil.com

டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸின் ஆட்டத்தை அவரின் ஐந்து மாத பெண் குழந்தை பால் குடித்துக் கொண்டே நேரில் பார்த்துள்ளார்.

Fed Cup டென்னிஸ் போட்டித் தொடரில், பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.

குழந்தை பிறப்புக்கு பிறகு செரீனா விளையாடும் போட்டி இதுவாகும், இந்தப் போட்டிக்கு செரீனாவின் கணவர் Alexis Ohanian, தனது ஐந்து மாத பெண் குழந்தையான ஒலிம்பியாவை அழைத்து வந்திருந்தார்.

இந்நிலையில் போட்டியின் போது ஒலிம்பியாவுக்கு, Alexis போத்தலில் பால் கொடுத்தபடியே போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். பின்னர், ஒலிம்பியாவும் தனது தாயின் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இது குறித்து செரீனா கூறுகையில், ‘எனது குழந்தையுடன் பயணம் செய்வது இதுதான் முதல் முறை, இது எனது வாழ்வில் சிறந்த தருணமாகும், நான் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்