சுவாசிக்க முடியாமல் திணறினேன்! காதலனால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரிட்டனில் தன்னுடைய காதலனால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ஒருவர் தனது அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரிட்டனின் கோவர் தீபகற்பத்தை சேர்ந்த பெண் ஸ்டெசி ஜில்லியம்(வயது 34).

இவர் தன்னுடைய வருங்கால கணவரான கீத் ஹக்சுடன் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது, இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த பெண்ணை ஹக்ஸ் அடித்து கழுத்தை நெறித்துள்ளார்.

இதில் ஸ்டெசி மயக்கமடையவே, இறந்து போய் விட்டார் என கருதிய ஹக்ஸ், குழி தோண்டி புதைத்து விட்டார்.

பின்னர் ஸ்டெசிக்கு சுயநினைவு திரும்பியதும் ஒருவழியாக உயிர் பிழைத்து வந்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஹக்ஸை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆயுள் தண்டனை வழங்கி ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த ஸ்டெபி கூறுகையில், புதைக் குழியில் இருந்த போது சுயநினைவு திரும்பியதும் கண்களுக்கு புதர்ச்செடிகளும், அழுக்கான மணல் குவியல்களும் என் உடலுக்கு மேல் இருப்பது தெரிந்தது.

எனது இதயத் துடிப்பை நன்கு உணர முடிந்தது, என்னால் சுவாசிக்க கூட முடியவில்லை. ஒருஇன்ச் கூட நகர முடியவில்லை, பலமுறை முயற்சித்தும் தோல்வியில் முடிந்தது.

பிறகு ஒருவழியாக மேலே வந்தேன், அருகில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு வெளியே மயங்கி விழுந்துவிட்டேன்.

அங்கிருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர், கோமா நிலைக்கு சென்ற நான் 26 நாட்கள் கழித்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளேன்.

என் வாழ்வில் இதுபோன்று நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை.

எனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனது புதிய வாழ்வை தொடங்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments