பிரித்தானிய அரண்மனைக்குள் நுழைய முயன்ற இளம்பெண் கைது

Report Print Peterson Peterson in பிரித்தானியா
334Shares
334Shares
lankasrimarket.com

பிரித்தானிய மகாராணி வசித்து வரும் அரண்மனைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இளம்பெண் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் லண்டனில் உள்ள பங்கிங்காம் அரண்மனையில் வசித்து வருகிறார்.

மகாராணி வசிக்கும் பகுதி என்பதால் இதனை சுற்றி 24 மணி நேரமும் பொலிஸ் கண்காணிப்பு கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் இளம்பெண் ஒருவர் அரண்மனை இரும்பு கதவு மீது ஏறி உள்ள நுழைய முயன்றுள்ளார்.

இக்காட்சியை கண்ட பொதுமக்கள் திகைத்து நின்றுள்ளனர்.

விபரம் அறிந்த பொலிசார் உடனடியாக விரைந்து சென்று ஏறிக்கொண்டு இருந்த பெண்ணை கீழே இழுத்து போட்டுள்ளனர்.

பின்னர், அவரது கைகளில் விலங்கு பூட்டி பொலிசார் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

எனினும், எதற்காக அரண்மனைக்குள் நுழைய முயன்றார் என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை.

தற்போது லண்டனில் உள்ள காவல் நிலையத்தில் பெண் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரித்தானிய நாட்டு சட்டப்பிரிவு 128-ன் அடிப்படையில் மகாராணிக்கு சொந்தமான இடங்களுக்குள் முறையான அனுமதி இல்லாமல் நுழைவது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்