ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரித்தானியாவின் உயரிய விருது

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஆப்கானிஸ்தானில் சேவையாற்றிய நாய் மாலிக்கு பிரித்தானியாவின் உயரிய விருதான Dickin விருது வழங்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு உதவி வரும் விலங்குகளுக்கு ஆண்டுதோறும் Dickin விருது வழங்கப்படும்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான விருதிற்கு மாலி என்ற நாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ராணுவ வீரர்களின் பலரின் உயிரை மாலி காப்பாற்றியுள்ளது.

இந்நிலையில் குண்டு தாக்குதலில் மாலியின் கால் மற்றும் காதில் அடிபடவே சிகிச்சைக்காக பிரித்தானியா கொண்டு வரப்பட்டது.

தற்போது 8 வயதாகும் மாலி முழுமையாக ஓய்வு பெற்ற நிலையில் சிகிச்சைகள் தொடர்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலிக்கு Dickin விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன்பாக 31 நாய்கள், 32 புறாக்கள், 4 குதிரைகள் மற்றும் ஒரு பூனை இந்த விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்