மேகன் மெர்க்கலின் வருங்கால அண்ணி கைது: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

மேகன் மெர்க்கலின் ஒன்றுவிட்ட சகோதரரை அடித்ததாக அவரின் வருங்கால அண்ணியை பொலிசார் கைது செய்து பின்னர் விடுவித்தார்கள்.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் வருங்கால மனைவி மேகன் மெர்க்கலின் ஒன்று விட்ட சகோதரர் டாம் மெர்க்கல்.

டாமும், டார்லின் பிளவுண்ட் என்ற பெண்ணும் காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1-ஆம் திகதி டாமுக்கும், டார்லினுக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் காதலரை டார்லின் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் ஒரேகன் மாகாணத்தில் நடந்துள்ளது, இதுகுறித்து டாம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் டார்லினை கைது செய்தனர்.

1½ நாள் சிறையில் இருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே டார்லினை கத்தி முனையில் வைத்து மிரட்டியதாக டாம் முன்னர் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இணையவுள்ள மேகன் மெர்க்கலின் குடும்பத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers