ஹொட்டல் உணவு குறித்து குறை கூறிய வாடிக்கையாளர்: நெத்தியடி பதில் கொடுத்த நிர்வாகம்

Report Print Raju Raju in பிரித்தானியா
488Shares
488Shares
ibctamil.com

பிரித்தானியாவில் உள்ள பிரபல ஹொட்டலில் உள்ள உணவு பொருளின் விலை குறித்து வாடிக்கையாளர் விமர்சித்த நிலையில் ஹொட்டல் நிர்வாகம் அதற்கு நெத்தியடி பதில் அளித்துள்ளது.

நாட்டின் பிரண்டன் பகுதியில் அமைந்துள்ளது The Oxton Bar and Kitchen ஹொட்டல்.

இங்கு டெப்பி டேவிஸ் என்ற வாடிக்கையாளர் சமீபத்தில் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிட்டுள்ளார். இதற்கு £8 கட்டணம் செலுத்தியுள்ளார்.

பின்னர் அந்த ஹொட்டலின் பேஸ்புக் பக்கத்தில் தனது அனுபவம் குறித்து பகிர்ந்தார். அதில், உணவு அருமையாக இருந்ததோடு, ஹொட்டல் ஊழியர்களும் நன்றாக செயல்பட்டனர்.

ஆனால் நான் சாப்பிட்ட உணவுக்கு £8 விலை என்பது அதிகம் என குறிப்பிட்டார்.

பொதுவாக இது போன்ற வாடிக்கையாளர் விமர்சனத்துக்கு எல்லா ஹொட்டல் நிர்வாகமும் மன்னிப்பு கேட்கும்.

ஆனால் The Oxton Bar நிர்வாகம் தங்கள் தரப்பு நியாங்களை எடுத்து கூறும் வகையில் நெத்தியடியாக பதில் பதிவு அளிததது.

அதில், £8 விலையில் 20 சதவீதம் நமது அரசின் வேட் வரியில் சென்று விடுகிறது. மீதம் £6.66 ஆகும்.

அதில் பீர் பட்டர், டார்ட்டர் சாஸ், மிஷ்கி பட்டாணி மற்றும் சங்கி சிப்ஸ் ஆகியவைகளை நாங்கள் வாங்க வேண்டும். இதில் £2.70 போய் விடுகிறது.

மீதம் நிற்பது £3.94! இதில் சமையல்காரருக்கு ஊதியம், உணவை பறிமாறும் சர்வருக்கு பணம் தரவேண்டும்.

மேலும், அடுப்பு, நீங்கள் உணவை பார்ப்பதற்கு விளக்குகள் போன்ற பொருளை வாங்க வேண்டும்.

ஆகவே இந்த விலை உங்களுக்கு அதிகமாக தோன்றினால் உங்கள் வீட்டிலேயே இது போன்ற உணவை செய்ய பரிந்துரை செய்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு பேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் நிலையில் ஹொட்டல் நிர்வாகத்தின் பதிலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்