எனது மகளை பார்த்தீர்களா? 11 ஆண்டுகளாக தந்தையின் பரிதவிப்பு

Report Print Printha in பிரித்தானியா
324Shares
324Shares
lankasrimarket.com

இங்கிலாந்தைச் சேர்ந்த கேட் மெக்கனின் மற்றும் ஜெர்ரி என்பவரின் முதல் மகள் மெட்லின், இவர் தனது 4 வயதில் காணாமல் போய் விட்டார்.

அவர் தொலைந்து 11 ஆண்டுகள் ஆன பின்பும் அவர்கள் நம்பிக்கையோடு தேடி வருகின்றனர்.

அவர்கள் கூறுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் விடுமுறைக்காகப் போர்ச்சுகல் சென்றோம்.

அங்கே ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தோம், மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் திடீரென்று காணாமல் போய்விட்டாள்.

அவளை தேடாத இடமில்லை, கேட்காத ஆட்கள் இல்லை, ஒரு பலனும் கிடைக்கவில்லை.

பின் போர்ச்சுகல் காவல்துறை விபத்தில் மகள் இறந்து விட்டாள் என்று சொல்லி விட்டது, ஆனால் அதற்கான சாட்சி எதையும் காட்டவில்லை.

அதனால் நாங்கள் அதை நம்பவில்லை, இங்கிலாந்து காவல் துறை மூலம் விசாரித்தபோது, யாரோ ஒருவர் எங்கள் மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

அதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை வந்தது, அதனால் நாங்களே பணம் கொடுத்து தேடச் சொன்னோம். என் மகள் தொலைந்ததில் இருந்து என்னால் ஒருநாள் கூட நிம்மதியாகத் தூங்க முடிந்ததில்லை.

பண்டிகை நாட்களின் போது அவளின் சிந்தனையிலேயே இருப்பதால் பல மடங்கு துயரமான வாழ்க்கையை நான் வாழ்கின்றேன்.

நண்பர்கள், உறவினர்கள் என்று எவ்வளவோ பேர் வருகிறார்கள். ஆறுதல் கூறுகிறார்கள். துக்கத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.

அவளின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இப்படி வளர்ந்திருப்பாள் என்று டிஜிட்டலில் உருவத்தை உருவாக்கி வருகிறேன்.

அதோடு என் மகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறேன், மற்றவர்களை இந்தப் புத்தகம் ஈர்க்குமா என்று தெரியாது.

ஆனால் இந்தப் புத்தகம் படிக்கும் யார் மூலமாவது என் மகள் எங்களுக்கு மீண்டும் கிடைத்து விடுவாள் என்ற காரணத்திற்காகவே இப்புத்தகத்தை வெளியிட்டேன்.

இதுவரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை, ஆனாலும் மகள் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.

என்னுடைய விடா முயற்சியும் நம்பிக்கையும், பிரார்த்தனையும் விரைவில் எங்களது மகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறேன் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்