பிரித்தானியா விமானநிலையங்களில் கைவரிசை காட்டிய திருடன்களை பிடித்த பொலிசார்

Report Print Santhan in பிரித்தானியா
144Shares
144Shares
ibctamil.com

பிரித்தானியா விமானநிலையங்களில் 40,000 பவுண்ட் வரை திருடிய திருடர்களை பொலிசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Luton மற்றும் Heathrow விமானநிலையங்களில் பயணிகளின் பணம், வால்லெட் போன்றவைகள் திருடு போவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

பெண் தொழிலதிபரின் வால்லெட் மற்றும் 3,000 பவுண்ட் பணங்கள் திருடப்பட்டன. இதையடுத்து இந்த செயலில் ஈடுபடும் நபர் யார் என்பது குறித்து கண்டறிய பொலிசார் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் Heathrow விமானநிலையத்தில் இரண்டு பேரை கண்காணித்து வந்த பொலிசார் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர்.

அவர்கள் விமானநிலையம் பிசியாக இருக்கும் நேரத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அதன் பின் மீண்டும் மீண்டும் இந்த விமானநிலையங்களுக்கு வந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

ரோமானியாவைச் சேர்ந்த இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் திகதி Luton விமானநிலையத்திற்குள் நுழைந்த போது பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இங்கு மட்டுமின்றி ஜேர்மனி மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற வேலையில் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கை செய்த நபர்களின் பெயர்கள் Niculae Ion(21) மற்றும் Niculae Avram(46) என தெரிவித்துள்ள பொலிசார் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் குறித்த விமான நிலையங்களில் 40,000 பவுண்ட் வரை திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்