காதல் மனைவியால் பிரித்தானியர் படுகொலை: குழந்தைகளை மீட்க போராடும் உறவினர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

சீனாவில் மனைவியால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியரின் பிள்ளைகளை மீட்க அவரது பெற்றோர்கள் போராடி வருகின்றனர்.

சீனத்து இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய இளைஞர் ஒருவர், அவரது மனைவியாலையே படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குறித்த பெண்மணிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இரு பிள்ளைகள் சீனத்து உறவினர்கள் கூடவே வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கும்படி கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகனை வெகு சீக்கிரம் இழந்துவிட்டோம், அவனது பிள்ளைகளையும் இழக்க தாங்கள் தயாரில்லை என கூறும் அவர்கள், பிள்ளைகள் தான் இனி எங்கள் உலகம் என தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர்களது தந்தைக்கு சிறப்பான திட்டம் இருந்தது, ஆனால் தற்போது அவர்கள் வளரும் சூழல் உகந்ததல்ல.

தனது பிள்ளைகளுக்கு அவன் என்ன தர விரும்பினானோ அதை தற்போது தங்களால் பிரித்தானியாவில் தர முடியும் என கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

34 வயதான Michael Simpson, சீனாவில் பிறந்த Weiwei Fu என்பவரை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சீனாவில் குடியிருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்த நிலையில் Weiwei Fu தமது கணவரை கத்தியால் தாக்கி படுகொலை செய்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்