வேலையில்லா பட்டதாரி அகதி செய்த செயல்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பட்டதாரியான அகதி ஒருவர் செய்த செயலால் முதலாளிகள் அவருக்கு வேலை கொடுக்க கியூவில் நிற்கிறார்கள்.

லிபிய அகதியான Mohamed Elbarkey (22) வேலை கோரி சுமார் 70 விண்ணப்பங்கள் அனுப்பியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

அப்போது அவருக்கு சிலிக்கான் வேலியில் David என்பவர் தனது CVயுடன் நின்றது நினைவுக்கு வந்தது.

அவரும் ஒரு அட்டையில் ”ஒரு அகதியாக வந்தேன், UCLஇல் ராக்கெட் சயன்ஸ் முடித்திருக்கிறேன், வேலை தேடிக்கொண்டிருக்கிறேன், எனது CVயைக் கேளுங்களேன்” என்று எழுதி அதைப் பிடித்துக் கொண்டு Canary wharf முன்பு நின்றார்.

அந்த வழியாக வந்த Mary Engleheart என்பவர் Elbarkeyயின் புகைப்படத்தை எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதை ரீட்வீட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு 24,000 லைக்குகள் கிடைத்ததோடு அது 16,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. அவரது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த வாரம் Elbarkey மூன்று இண்டர்வியூக்களில் பங்கேற்க உள்ளார்.

அது மட்டுமின்றி ஏராளமான நிறுவனங்கள் அவரது CVயை அனுப்புமாறும், அது தங்கள் நிறுவனத்திற்கு பொருந்துமா என்று பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்