பிரித்தானியாவில் குவியல் குவியலாக உடல் உறுப்புகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
473Shares

பிரித்தானிய மருத்துவமனைகளிலிருந்து அகற்றப்படும் உடல் உறுப்புகளை சேகரித்து அழிக்க ஒப்பந்தம் செய்துள்ள ஒரு நிறுவனம், ஒப்பந்தப்பபடி அவற்றை அழிக்காமல் குவியல் குவியலாக சேர்த்து வைத்ததால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Healthcare Environment Services என்னும் அந்த நிறுவனம் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காக சுற்றுச்சூழல் ஏஜன்சியால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை அழிக்கும் ஐந்து இடங்களில் Healthcare Environment Services, விதிமுறைகளை மீறியுள்ளது.

அதனால் அந்நிறுவனத்தின்மீது அதிகப்படியான கழிவுகளை அகற்றுதல் உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு கிரிமினல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

ஆனால் அந்நிறுவனமோ பிரித்தானியாவின் பழமையான இன்சினரேட்டர்கள் மற்றும் கடுமையான கழிவு அகற்றல் கொள்கைகளே ஏராளமான அளவில் வந்து குவியும் கழிவுகளை குவித்து வைப்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படி உடல் உறுப்புகள் குவித்து வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ள அரசாங்கமோ சுற்றுச்சூழல் ஏஜன்சியின் எச்சரிக்கைகளுக்கு அது வழிவகை செய்துவிட்டதுதான் பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்