பிரித்தானியாவில் ஆற்றில் மிதந்து வந்த மனிதனின் கால்! விசாரணையில் பொலிசார் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு காணமல் போன பெண்ணின் கால் ஆற்றில் மிதந்து கிடந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Manchester நகரத்தின் Hale பகுதியைச் சேர்ந்தவர் Marie Scot. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் திகதி காணமல் போனார்.

இதனால் குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் Marie Scot-ஐ தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் பொலிசாருக்கு ஒரு போன் வந்துள்ளது.

அதில், Pendleton-னின் Whit Lane அருகே இருக்கும் Irwell ஆற்றில் மனிதனின் கால் போன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்த பொலிசார் அதை மனிதனின் கால் என்பதை உறுதி செய்தனர். அதன் பின் அந்த காலின் டிஎன்ஏவை சோதனைக்கு அனுப்பிய போது, அது Marie Scot-ன் கால் என்பது உறுதியானது.

இந்த தகவலை அறிந்த அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். காணமல் போனதாக கூறப்பட்ட அவரின் கால் மட்டும் கிடைத்துள்ளதால், என்ன நடந்தது என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 58 வயதான Marie Scot-க்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு வெளியே வந்த அவர் காணமல் போயுள்ளார்.

இது குறித்து அவரின் மகன் Stuart கூறுகையில், அவர் காணமல் போனதில் இருந்து எங்கள் குடும்பமே நிலைகுலைந்து இருந்தது.

இப்போது அவர் இல்லை என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கண்ணீர்விட்டு கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்