காதலனை கரம்பிடிக்க ஆசைப்பட்ட பெண்: திருமணம் முடிந்த 36 மணி நேரத்தில் இறந்த சோகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் திருமணம் முடிந்த 36 மணி நேரத்தில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த டாஷா பர்டன் என்ற 36 வயது பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக, தன்னுடைய பிறந்தநாளன்று டேனியல் கோர்லி என்ற நபரின் காதல் வலையில் விழுந்துள்ளார்.

அடுத்த 6 மாதத்திலே இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். 2016ம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு ஒருநாள் வயிற்றுவலியின் காரணமாக டாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், டாஷாவிற்கு குடல் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதியன்று மீண்டும் டாஷாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. பின்னர் வேகமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட டாஷாவின் உடலில் நுரையீரல்கள், கல்லீரல் மற்றும் நிணநீர் கணுக்களுக்கு புற்றுநோய் பரவியிருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.

டாஷா நீண்ட நாட்களாக தன்னுடைய காதலனை மணமுடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனை அறிந்துக்ண்ட அவருடைய தோழி கேட் லேடன், நண்பர்கள் மூலம் டாஷா- டேனியல் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இதனடியடுத்து அவர்களுடைய திருமணம் இங்கிலாந்தில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனையில் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 36 மணிநேரத்தில் டேனியல் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு சோகமான பதிவினை வெளியிட்டார். அதில், துரதிஷ்டவசமாக நான் என்னுடைய அழகான மனைவியை இன்று மாலை 5.30 மணிக்கு இழந்துவிட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புக்கு மத்தியில் அமைதியான முறையிலே அவள் கடந்து சென்றாள். நான் முற்றிலும் மனமுடைந்துவிட்டேன். ஆனால் அவள் நிச்சயம் என்னுடைய மகன் மூலம் என்னுடன் இருப்பாள் என்பது எனக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்