பிரித்தானியாவில் தாயின் கண்முன்னே 4 குழந்தைகள் பலியான சம்பவத்தில் அதிரடி திருப்பம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் கேஸ் வெடிப்பு சம்பவத்தில் தாயின் கண்முன்னே 4 குழந்தைகள் பரிதாபமாக பலியான சம்பவத்தில், குழந்தைகளின் பெற்றோர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தனியாவின் ஸ்டாஃபோர்ட் பகுதியில் உள்ள வீட்டில் செவ்வாய்கிழமையன்று கேஸ் வெடித்து சிதறியதில், ரிலே (8), கீகன் (6), ஆலி (3) மற்றும் அவர்களது நான்கு வயது சகோதரி டிலி ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவத்தில் குழந்தைகளின் பெற்றோர்களான தாய் நட்டலி அனிட் (24), தந்தை கிறிஸ் மவுல்டன் (28) ஆகியோர் தங்களுடைய கடைசி குழந்தை ஜாக்கை கையில் தூக்கியவாறே முதல் மாடியின் ஜன்னல் பகுதியிலிருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர்.

புகையை உள்ளிழுத்ததாலும், கையில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டதால் கிறிஸ் மவுல்டன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் பெரிய அளவிற்கு காயங்கள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பொலிஸார், நேற்று மதியம் 1.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் கூரையானது உடைந்துள்ளது, ஜன்னல்கள் நொறுங்கியுள்ளன. புகைப்படலத்தால் வீடு முழுவதும் கருமை சூழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

நிதி திரட்டும் பக்கம் மூலம் 1,800 க்கும் அதிகமான மக்கள் £ 28,500 க்கும் மேலான பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவனக்குறைவாக இருந்த காரணத்தால் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம். இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை மேற்கொண்டு விரைவில் மக்களும் தகவல்களை அறிவிப்போம். விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பொதுமக்கள் யாரும் விபத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி ஊகிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers