2 முறை திருமணம்... நான்கு குழந்தைகள்... இன்னும் அதிகளவில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் இளம்பெண்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த மொடலான டேனிலி லயார்ட் என்பவர் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

டேனிலி டயார்ட் என்ற இளம்பெண் மொடலாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் உள்ளார்.

இவர் ஜேமி ஒஹர என்பவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தம்பதிக்கு அர்ச்சி, ஹாரி, ஜார்ஜ், ரோனி என நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் டேனிலி தனது கணவர் ஜேமியை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் மைக்கேல் என்பவரை காதலித்து வந்த டேனிலி கடந்த 6ஆம் திகதி அவரை துபாயில் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மைக்கேலுடன் சேர்ந்து நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள விரும்புவதாக டேனிலி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு இன்னும் குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது.

இந்தாண்டு இறுதியில் இருந்து குழந்தை பெற முயல்வேன், விமானத்தில் மைக்கேலுடன் பயணிக்கும் போது Instant Family என்ற திரைப்படத்தை பார்த்தேன், அதில் பெற்றோர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பார்கள்.

அதை பார்த்து நாமும் அப்படி குழந்தைகளை தத்தெடுக்கலாமா என மைக்கேலிடம் கேட்டேன். ஆனாலும் நாம் குழந்தை பெற்று கொள்வது தான் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

எனக்கு அடுத்து பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக டேனலி ஏற்கனவே கூறியது வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers