லாட்டரியில் வென்ற லட்சக்கணக்கான பணத்தை எண்ணி கொண்டிருந்த நபர்: அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் லாட்டரியில் வெற்றி பெற்றவர்களின் பணத்தை ஒருங்கிணைப்பாளர் எண்ணி கொண்டிருந்த போது அவரை தாக்கிவிட்டு பணத்தை திருடி சென்ற நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தனது வீட்டின் படுக்கையறையில் வெற்றியாளர்களின் பணத்தை எண்ணி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் உள்ளே இரண்டு மர்ம நபர்கள் புகுந்தனர், ஆனால் தனது மனைவி தான் வீட்டுக்குள் வருகிறார் என ஒருங்கிணைப்பாளர் நினைத்தார்.

ஆனால் அந்த மர்ம நபர்கள் அவரை பயங்கரமாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த £11,000 பணத்தை திருடி சென்றனர்.

இதில் ஒருங்கிணைப்பாளரின் விலா எலும்பு உடைந்ததுடன், தலையிலும் அடிப்பட்டது.

பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக போர்ஜ் பிரட்வெல் (40) மற்றும் டேனியல் சர்னோக் (38) ஆகிய இருவரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் இதில் தொடர்புடைய இன்னொருவரையும் கைது செய்தார்கள்.

போர்ஜ் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில் குறித்த லாட்டரி நிறுவனத்தில் தான் முன்னர் வேலை செய்ததாக கூறினார்.

மூவர் மீதான குற்றச்சாட்டுகள் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனை வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers