1 வயது மகளுக்கு அருகில் நெருங்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: அதிர்ந்து போன தந்தை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது மகளின் பின் பக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று வந்துகொண்டிருப்பதை பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஸ்கட்லாந்தை சேர்ந்த புரூஸ் பேக்கர் என்பவருடைய குடும்பத்தினர், ஈஸ்டர் தினத்தன்று அவருடைய தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் திடீரென குடும்பத்தினர் அனைவரும் பாம்பு என கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.

இந்த சத்தத்தை கேட்ட புரூஸ் பேக்கர் ஆரம்பத்தில் ஏமாற்ற நினைப்பதாக எண்ணிக்கொண்டு தோட்டத்திற்கு மெதுவாக சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய ஒரு வயது மகளுக்கு பின் பக்கம் 7 அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று நின்றுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் பக்கத்து வீட்டு நபரின் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பிடித்து பெட்டியில் அடைந்துள்ளார். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பத்திரமாக பாம்பை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கூறுகையில், கண்டுபிடிக்கபட்ட பாம்பு விஷத்தன்மை அற்றது. ஆனால் அதேசமயம் பசி அதிகரித்தால் உணவை விழுங்கும் தன்மை கொண்டது என தெரிவித்துள்ளனர்.

பின்னர் அதற்கு சிகிச்சை அளித்த அதிகாரிகள், பாம்பின் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்