பிரித்தானியாவில் 48 பாடசாலைகள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள 48 இஸ்லாமிய பாடசாலைகள் சகிப்புத்தன்மை மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலின் எதிரொலியாக சர்வதேச நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தற்கொலை தாக்குதல்தாரிகளில் ஒருவன் பிரித்தானியாவில் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்றவர் என்பதால் விசாரணை பிரித்தானியாவிலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையிலேயே 48 இஸ்லாமிய பாடசாலைகள் தொடர்பில் பகீர் தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள பாடத்திட்டங்கள் Dars-E-Nizami என்ற பெயரில் அறியப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் நாடுகளில் மத அடிப்படைவாதிகளை உருவாக்க இதுபோன்றன் பாடத்திட்டங்களை அங்கு அமுல்படுத்தியுள்ளனர்.

இந்த 48 பாடசாலைகளில் 4-ல் நடனம் மற்றும் இசைக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதுபோன்ற தடையானது தலிபான் ஆதிக்க ஆப்கானிஸ்தானில் நடைமுறையில் இருந்தது. மட்டுமின்றி தடையை மீறுபவர்களுக்கு பொதுவெளியில் சவுக்கடியும் தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது.

பிரித்தானியாவில் லண்டன், மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் லெய்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகளில் இமாம்களை தயார் படுத்தும் இஸ்லாமிய பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

ஆனால் பர்மிங்காம் பகுதியில் செயல்பட்டுவரும் பாடசாலையானது மத அடிப்படைவாத கருத்துகளை பயிற்றுவிப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு குறித்த பாடசாலையில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துக்களை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதாக முக்கிய ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்