Brexitஐ நிறைவேற்றப்போகும் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஒரு ஆசிய நாட்டவரா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

என்னை பிரதமராக்குங்கள், நான் பிரெக்சிட்டை நிறைவேற்றுகிறேன் என்கிறார் ஆசிய பின்னணி கொண்ட பிரித்தானியாவின் உள்துறைச் செயலரான சஜித் ஜாவித்.

பாகிஸ்தானில் பேருந்து ஓட்டுநராக இருந்த ஒருவரின் மகனான சஜித், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், வங்கி ஒன்றில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

தலைவர்கள் என அழைக்கப்படும் பலர் உறுதியான திட்டம் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில், என்னை பிரதமராக்குங்கள், நான் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே அழைத்து வருகிறேன் என்று கூறும் சஜித், ஐந்து அம்ச திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

இல்லை, இல்லை என பல இல்லைகளை கொண்ட அவரது திட்டம் இரண்டாவது வாக்கெடுப்பு, முன் கூட்டியே பொதுத்தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கையின் 50 வது பிரிவின்படி வெளியேறும் திட்டத்தை திரும்பப்பெறுதல் என அனைத்திற்கும் இல்லை என்கிறது.

ஒப்பந்தங்களின்றி பிரெக்சிட்டை நிறைவேற்றத் தயாராதல், அவசர பட்ஜெட் ஒன்றை தயார் செய்தல், இவற்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற தாங்கள் பயப்படவில்லை என்பதை காட்டுதல்.

என்ன நடந்தாலும் சரி, ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சரி, இல்லையென்றலும் சரி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியே தீருதல் என்பதே அவரது திட்டம்.

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்து விட்டார்கள், அவர்களிடம் மீண்டும் இன்னொரு வாக்கெடுப்பை முன்வைப்பது சரியல்ல என்கிறார் சஜித்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers