தாத்தாவின் கையிலிருந்த குழந்தை கப்பலிலிருந்து விழ யார் காரணம்? உண்மை வெளியானது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பியூர்டோ ரிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் இண்டியானாவைச் சேர்ந்த குழந்தை தனது தாத்தாவின் கையிலிருந்து விழுந்து இறப்பதற்கு யார் காரணம் என்னும் உண்மை இறுதியாக வெளியாகியுள்ளது.

கப்பலின் குழந்தைகளுக்கான விளையாடும் இடத்தில், தனது பேத்தி Chloe Wiegandக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார் தாத்தா Salvatore Anello.

Chloeவுக்கு கண்ணாடியின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் என்பது புகைப்பட ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

ஆகவே அவள் தனது தாத்தாவிடம் தன்னை தூக்கி கண்ணாடிக்கு அருகில் நிற்க வைக்கச் சொல்லியிருக்கிறாள்.

Salvatoreம் அவளை தூக்கி கண்ணாடி இருப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு இடத்தில் நிற்க வைத்திருக்கிறார்.

அடுத்த கணம் கண்ணாடி இருப்பது தெரியாமல், தனது வழக்கத்தின்படியே கண்ணாடியைத் தட்ட அமுயன்ற Chloe 11ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கிறார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

பொலிசார் Salvatore மீது குற்றம் சாட்டக் காத்திருக்க, அவரது குடும்பமோ அவரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது.

Chloe ஒரு கண்ணாடி ஜன்னலின் மீது கைகளை ஊன்றி, சாய்ந்து நின்றபடி ஐஸ் ஹாக்கி விளையாட்டை ரசிக்கும் ஒரு படத்தை வெளியிட்டுள்ள அவளது குடும்பத்தார், அவள் எப்போதுமே கண்ணாடியின் மீது கைகளை ஊன்றி நிற்பது வழக்கம் என்றும், எனவே அது Salvatoreஇன் தவறு அல்ல என்றும் வாதிடுகிறார்கள்.

அது மட்டுமின்றி, கப்பலில் ஏன் கண்ணாடி ஜன்னல் ஒழுங்காக மூடி வைக்கப்படவில்லை என்று அவர்கள் கப்பல் நிறுவனத்தை குற்றம் சாட்டுகிறார்கள்.

விசாரணை இன்னும் தொடரும் நிலையில், விசாரணை முடியும்வரை Chloeவின் குடும்பத்தார் பியூர்டோ ரிகோவிலேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Chloeவின் குடும்பத்தார் தாங்க முடியாத துயரத்தில் இருப்பதாகவும், ஹிஸ்டீரியா வந்தது போல நடந்து கொள்வதால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலையில் வைக்க வேண்டியுள்ளது எனவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers