பிரித்தானியாவிற்கு வந்த 16 வயது சிறுமிக்கு என்ன ஆனது? அச்சத்தில் பெற்றோர்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதால், அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாமல் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் Queens மாகாணத்தைச் சேர்ந்தவர் Victoria Grabowski. 16 வயது சிறுமியான இவர் கடந்த சனிக்கிழமை John F Kennedy விமானநிலையத்தில் பிரித்தானியா செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார்.

ஆனால் பிரித்தானியாவில் வந்திறங்கிய அவரை காணவில்லை. இதனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா பொலிசார் இந்த சிறுமியை தேடி வருகின்றனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், அவள் பேஸ்புக்கில் பிரித்தானியாவைச் சேர்ந்த வயதான நபருடன் பேசிக் கொண்டிருந்தாள், ஆனால் அதை அவள் மறைத்துவிட்டாள் என்று கூறியுள்ளனர்.

இதனால் சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் மற்றும் சிறுமியின் பெற்றோர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் சிறுமிக்கு எப்படி பிரித்தானியா செல்லும் அளவிற்கு பணம் கிடைத்தது என்பது தெரியவில்லை என்று பெற்றோர் புலம்பியுள்ளனர். அதுமட்டுமின்றி சிறுமி போலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் எனவும் அவரிடம் போலாந்து பாஸ்போர்ட் இருந்துள்ளதாகவும், அதை வைத்தே அவர் சென்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்