லண்டனில் ரத்த வெள்ளத்தில கிடந்த இளைஞர்... சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த திகில் தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டன், Sydenham சாலையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாவது, சாலையில் இருந்த கார் ஒன்றில் இளைஞர்கள் குழுவாக இருந்தனர்.

அப்போது, கையில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் காருக்கு அருகே வந்தார், இதைக்கண்டதும் காரில் இருந்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடி விட்டனர்.

 Pictures showed the window shattered but not broken
LONDON NEWS PICTURES

காருக்குள் இருந்தவரை நோக்கி அவர் சுட்டார், காரின் ஜன்னல் கண்ணாடியில் பட்டு திரும்பிய தோட்ட, சுட்ட இளைஞர் மீதே பாய்ந்தது. இதில், அவர் நிலைகுலைந்த ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்தார்.

காருக்குள் இருந்து இறங்கிய நபர், சரிந்த இளைஞரை வீடியோ எடுத்தப்படி கத்திக்கொண்டு ஓடிவிட்டார் என கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவ உதவி குழுவினர், தோட்டாவால் பாய்ந்த இளைஞர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவிலலை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers