குட்டி இளவரசர் ஜோர்ஜ் பாடசாலையில் கொரோனா பாதிப்பு... பிரித்தானியாவில் மொத்தம் 40: நடவடிக்கை தீவிரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் அவரது சகோதரி சார்லோட் ஆகியோர் பயிலும் பாடசாலையில் சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள Thomas's Battersea பாடசாலையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டதால் அவர்களை பாடசாலை நிர்வாகம் குடியிருப்புக்கு திருப்பி அனுப்பியுள்ளது என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி அவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் மருத்துவ அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த நால்வரில் இருவர் வடக்கு இத்தாலியில் இருந்து விடுமுறை முடித்து திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் காய்ச்சல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் அவரது சகோதரி சார்லோட் ஆகியோர் பயிலும் பாடசாலையில் இதுவரை எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

பிரித்தானியாவில் இதுவரை Thomas's Battersea உள்ளிட்ட 40 பாடசாலைகள் கொரோனா பாதிப்பு தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சில பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன, எஞ்சிய பாடசாலைகள் அறிகுறிகளுடன் இருக்கும் மாணவர்களை தற்காலிகமாக வீட்டிற்கு அனுப்பியுள்ளதுடன் மருத்துவ அறிக்கையும் கோரியுள்ளது.

இருப்பினும் பாடசாலைகளை மூட வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பிரித்தானிய சுகாதார மையம் விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பில் மிக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக Thomas's Battersea பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர் என தெரிவித்துள்ள பாடசாலை நிர்வாகம்,

இர்கள் தற்போது தங்கள் குடியிருப்புகளில் தங்களின் மருத்துவ சோதனை அறிக்கைகளைப் பெறக் காத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...