அவர் மூளையை தானம் செய்ய நினைத்தார்! ஆனால் கொரோனா தடுத்துவிட்டது - கலங்கும் மனைவி

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரசால் 45 வயது நபர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கிரேக் ருஸ்டன் என்பவர், கடந்த திங்கள்கிழமை கொரோனாவால் உயிரிழந்தார். அவர்தான், கொரோனாவால் பிரித்தானியாவில் குறைந்த வயதில் உயிரிழந்த முதல் நபர்.

பிரித்தானியாவில், இதுவரை கொரோனா தொற்றிற்கு 71பேர் பேர் உயிரிழந்துள்ளனர். அதில், கிரேக் ருஸ்டனும் உள்ளடங்கும்.

மூளை சம்பத்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிரேக், அதற்கான கடும் சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார். தனது நோய் குறித்து 2018ஆம் ஆண்டுமுதல், விரிவான தகவல்களை blog-ல் எழுதி வந்துள்ளார்.

Facebook/Me and my MND

இதுகுறித்து ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ள கிரேக் மனைவி Sally, அவருக்கு 2018ஆம் ஆண்டு சிகிச்சையளித்த மருத்துவர் இரண்டு ஆண்டுகாலம் மட்டும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், கிரேக் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தார். பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிகம் முனைப்பு காட்டினார்.

மேலும், தான் இறந்தால் இதுபோன்று பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருந்து கண்டறிய உதவும் Oxford Brain Bankக்கு மூளையை தானமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அவர் அற்புதமான மனிதர். அவர் ஆசையை நிறைவேற்ற வைரஸ் தடையாகிவிட்டது என்று கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்