பிரித்தானியார்களே வீட்டில் தங்கவில்லை என்றால்.. போரிஸ் உங்களுக்கும் இப்படி தான் செய்வார்..! பீட்டர்சன் பகிர்ந்த வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவிற்கு 335 பேர் பலியாகியுள்ள நிலையில் 6,650 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக 3 வாரங்கள் பிரித்தானியா முடக்கப்படும் என பிரதம் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘வீட்டில் தங்கவில்லை என்றால் போரிஸ் ஜான்சன் உங்களுகளையும் இவ்வாறு செய்வார்’ என பதிவிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ, ‘லெஜண்டரி’ கால் பந்து தொடரில் விளையாடிய அப்போதைய லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் எதிரணி வீரரை ஒருவரை தலையால் முட்டி சாய்க்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்