இளவரசர் பிரித்தானியா குடிமக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை!

Report Print Basu in பிரித்தானியா

‘Pick for Britain’ பிரச்சாரத்தில் சேர ஒன்றிணையுமாறு பிரித்தானிப குடிமக்களை இளவரசர் சார்லஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் பயிர்களை அறுவடை செய்ய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று அஞ்சும் விவசாயிகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட பிரித்தானியா அரசாங்கத்தின் முன்முயற்சியே ‘Pick for Britain’ பிரசாரமாகும்.

‘Pick for Britain’ பிரசாரம் விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அறுவடை செய்ய உதவுமாறு மக்களை அழைக்கிறது.

இரண்டாம் உலகப் போரின்போது ஆண்கள் இராணுவத்தில் சேரும் வகையில் பெண்கள் விவசாயத்தில் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பிரித்தானியாவின் உள்ளூர் அமைப்பான ‘பெண்கள் நில இராணுவத்துடன்’ இந்த இயக்கத்தை ஒப்பிட்டுள்ளார் இளவரசர் சார்லஸ்.

பயிர்களை எடுக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் தேவைப்படுவார்கள். இது கடினமான பணி ஆனால் மிகவும் முக்கியமானது என்று இளவரசர் சார்லஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்