லண்டனில் பெண் வேடமிட்டு மாணவியை பின் தொடர்ந்து வந்த இளைஞன் செய்த மோசமான செயல்! சிசிடிவி புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா
621Shares

லண்டனில் அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பெண் வேடத்தில் துரத்திய ஆண் அவரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் திகதி நடந்துள்ளது.

18 வயதான மாணவி ஒருவர் இரவு தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை தனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பெண்ணொருவர் தன்னை பின் தொடர்ந்து வருவதை அவர் கண்டார். தனது வீடு வந்ததும் உள்ளே நுழைய முயன்ற மாணவியை அப்பெண் கீழே தள்ளிவிட்டு தவறுதலாக நடக்க முயன்றார்.

அப்போது தான் மாணவிக்கு எதிரில் நிற்பது பெண் இல்லை ஆண் என தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அலறிதுடித்த மாணவி ஒருவழியாக அங்கிருந்து தப்பிய மாணவி பொலிசில் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து பொலிசார் பெண் வேடமிட்டு வந்த இளைஞனான Mark Brownஐ (30) கைது செய்தனர். மேலும் அவர் பெண் வேடத்தில் செல்லும் சிசிடிவி புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

அவர் மீது தொடர்ந்து நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய விசாரணையின் போது Mark Brown கூறுகையில், நான் அந்த மாணவியிடம் கொள்ளையடிக்கவே வந்தேன், அவரிடம் தவறுதலாக நடக்கவில்லை என கூறினார்.

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்