இது பேரழிவில் முடியக்கூடும்: பிரித்தானியா விமானப்படை தலைவர் எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

விண்வெளியில் நடக்கும் ஆயுத போட்டி பேரழிவில் முடியக்கூடும் என்று பிரித்தானியா விமானப்படைத் தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் எச்சரித்துள்ளார்.

விண்வெளி இப்போது போட்டியிடும் போர்-சண்டைக் களமாக மாறியுள்ளது என்று மார்ஷல் மைக் விக்ஸ்டன் கூறியுள்ளார்.

சாத்தியமான வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை பிரித்தானியா இனி புறக்கணிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நமது வான் அல்லது விண்வெளியை யாரும் அணுகாத நிலையில் இனியும் யாரும் அணுகமாட்டார்கள் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது,

வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதலை நாம் புறக்கணிக்க முடியாது என்று விக்ஸ்டன் கூறினார்.

பிரித்தானியாவின் விண்வெளி அணுகல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும், பிரிட்டிஷ் செயற்கைக்கோள் சேவைகளுக்கு ஏதேனும் இழப்பு அல்லது இடையூறு ஏற்பட்டால் அது அன்றாட வாழ்க்கையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்