லண்டன் இரயிலில் 3 பெண்களை நோக்கி அநாகரீகமான செயலில் ஈடுபட்ட நபர்! சிசிடிவி புகைப்படங்களுடன் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
511Shares

லண்டன் இரயிலில் இரு வேறு சமயங்களில் மூன்று பெண்களை நோக்கி ஒழுக்கத்தை மீறிய அநாகரீகமான செயலில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு லண்டன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி மற்றும் ஜூன் 10ஆம் திகதி இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி Euston, Totteridge & Whetstone and Woodside Park வழியாக செல்லும் இரயில்களில் இரவு 10ல் இருந்து 11 மணிக்குள் நபர் ஒருவர் இரயிலில் ஏறியிருக்கிறார்.

பின்னர் மூன்று பெண்களை நோக்கி ஒழுக்கத்தை மீறிய செயலில் ஈடுபட்டிருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட நபர் தொடர்பான இரண்டு சிசிடிவி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் உள்ள நபரிடம் இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க விரும்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரயிலில் நடந்த சம்பவம் குறித்து தெரிந்தாலோ அல்லது சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபரை தெரிந்தாலோ தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்