பிரித்தானியாவின் லிவர்பூலில் சுமார் 8,000 பள்ளி மாணவர்களும் 350 ஆசிரியர்களும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.
லிவர்பூல் நகரில் நேற்று ஒரே நாளில் 203 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, தற்போது இது 100,000 பேருக்கு 40.8 என்ற தொற்று வீதத்தை அதிகமாகக் கொண்டுள்ளது.
மட்டுமின்றி பிரித்தானியாவில் அதிக கொரோனா பாதிப்பு உறுதியான நகரங்களில் இதுவும் ஒன்று என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மேயர் ஜோ ஆண்டர்சன் வெளியிட்ட தகவலில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிவர்பூல் நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1254 அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு 6 நாட்களுக்கு ஒருமுறை இது இருமடங்காக அதிகரிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
மேலும், லிவர்பூல் நகரில் தற்போது 8,000 பாடசாலை மாணவர்களும், 350 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூன் 1ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் பாடசாலைகள் திறந்து செயல்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்ததை, தாம் எதிர்க்கவே விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக லிவர்பூல் நகரம் தற்போது மிகவும் கடினமான நிலையில் இருப்பதாக சுகாதார உயரதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.