இங்கிலாந்தில் அதிகரிக்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை! கடந்த 2 ஆண்டுகளில் 115% உயர்வு

Report Print Karthi in பிரித்தானியா
140Shares

ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருதாளர மந்த நிலையானது கொரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டிருந்த நிலையில் தற்போது அதனுடைய வெளிப்பாடாக இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 115 சதவிகித அளவில் கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப்புற இங்கிலாந்து பாதுகாப்பு பிரச்சார (Campaign to Protect Rural England) இயக்கத்தின் கணக்கெடுப்பின்படி அந்நாட்டின் கிரமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கையானது 19,975 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2017-18 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் 115 சதவிகிதம் அதிகமாகும்.

தொடக்கத்தில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இந்த சிக்கல் அதிக அளவில் இருந்து வந்தது. ஆனால், காலப்போக்கில் தற்போது இங்கிலாந்து முழுவதும் இந்த சிக்கல் மேலெழுந்துள்ளதை புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

கிராமப்புறங்களில் வீடற்ற தன்மை அதிகரிப்பது நகரங்கள் மற்றும் நகரங்களில் நிகழும் விடயத்தை விட அதிகமாக உள்ளது, மேலும் கிராமப்புறங்களில் வீட்டுவசதி பற்றாக்குறை விரைவில் மோசமடையக்கூடும் என்று கிராம சபைகள் அஞ்சுகின்றன.

தற்போதைய சமூக வீடமைப்பு கட்ட விகிதங்களில் கிராமப்புற வீட்டுவசதி காத்திருப்பு பட்டியல்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று சிபிஆர்இ கணக்கிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்