பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த இரட்டையர்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா
328Shares
328Shares
ibctamil.com

அமெரிக்காவின் Nevada மாகாணத்தில், மகன்களே பெற்ற பெற்ற தாயை கொடுரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nevada மாகாணத்தை சேர்ந்த Dawn Liebig (46) என்பவருக்கு 17 வயதில் Michael Wilson, Dakota Saldivar என்ற இரட்டை மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 9-ம் தேதியன்று மகன்கள் இருவரும் தங்களது தாயுடன் அரை மணி நேரமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அன்று இரவு Dawn உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென யாரோ கடுமையாக தாக்கி கத்தியால் கழுத்து பகுதியில் குத்தியுள்ளனர். இதில் வலிதாங்க முடியாத Dawn உதவிக்கு தன் மகன்களை சத்தமிட்டு அழைத்துள்ளார். ஆனால் அவருக்கு தெரியவில்லை கொடூரமாக தாக்குவதே அவரின் மகன்கள் தான் என்று.

பின்னர் தாயின் உடலை காரில் ஏற்றிய இருவரும், Dawn இறப்பு ஒரு தற்கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக மலையிலிருந்து தள்ளிவிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள், "என்னுடைய அம்மா இறந்துவிட்டார்" என செல்போனில் அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியின் மூலம் உஷாரான பொலிஸார் Dawn கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.

அவர்களது வயது வெறும் 17 என்பதால் கைது செய்யாமல் இத்தனை நாட்களாக காத்திருந்த பொலிஸார், 18 வயது நிரம்பியதும் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரு பெற்றோராக தங்களது தாய் நடத்தும் விதம் எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் அவரை கொலை செயய்ய திட்டமிட்டோம். அதன்படி அவர் உறங்க சென்றதும், 20 முறை சுத்தியலால் கடுமையாக தாக்கிவிட்டு பின்னர் கழுத்தில் கத்தியாலும் குத்தி கொலை செய்தோம்.

அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை மறைப்பதற்காக, எங்களுடைய தாய் காணாமல் போய்விட்டார் என பொலிஸாரிடத்தில் புகார் அளித்துவிட்டு தப்பித்துவிடலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கினை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்